LATEST NEWS
காலையிலேயே ஸ்டாலின் தலையில் இடி… திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையும் டெல்டா MLA… பரபரப்பில் அரசியல் வட்டாரம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் கசிந்துள்ளது. தவெக தலைமை தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட ரகசிய அழைப்பை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தவெகவில் இணைவதற்கு முன்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற பிரதான நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் முன்னிலையில்தான் தான் கட்சியில் இணைவேன் என்ற கடுமையான நிபந்தனையையும் அந்த திமுக MLA அடுக்கியுள்ளாராம். இந்த நிபந்தனைகளுக்குத் தவெக தரப்பில் தற்பொழுது பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டதால், வரும் நாட்களில் திமுகவிலிருந்து ஒரு முக்கிய விக்கெட்டாக இந்த ராஜினாமா அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தற்பொழுது திமுக மற்றும் தவெக ஆகிய இருதரப்பு அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
