அடப்பாவமே..! இரண்டு மகள்கள் இருந்தும் தனிமையில் கழிந்த 40 ஆண்டுகள்… உயிரிழந்த பின்னும் தொடரும் தேடல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! இரண்டு மகள்கள் இருந்தும் தனிமையில் கழிந்த 40 ஆண்டுகள்… உயிரிழந்த பின்னும் தொடரும் தேடல்..!!

Published

on

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற முதிய பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகள்களைத் தேடி வெளியிடப்பட்ட செய்தித்தாள் அறிவிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு 2 மகள்கள் இருந்த போதிலும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற முகவரியோ அல்லது தொடர்பு விவரங்களோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

கடந்த நவம்பர் 13-ம் தேதி வயது மூப்பு காரணமாக லலிதா கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். அவரது ரத்த சொந்தங்கள் யாரும் உடனில்லாத நிலையில், அவருக்கு உறவினரான ஒரு தம்பதியும், அவர் வசித்த கட்டிடத்தின் அக்கம்பக்கத்தினரும் ஒன்றிணைந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். தொடர்ந்து, அவரது மகள்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு இத்தகவலைத் தெரிவிக்கும் நோக்கில், உஷா லட்சுமிநாராயணன் மற்றும் பவன் ஷெட்டி ஆகியோரின் தொடர்பு எண்களுடன் செய்தித்தாளில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisement

இந்த அறிவிப்பைப் பார்த்த நிதித்துறை வல்லுநர் கிஷோர் சுப்பிரமணியன் என்பவர், பவன் ஷெட்டியைத் தொடர்பு கொண்டு பேசிய பிறகு, “அம்மாவுக்கு பிரியாவிடை சொல்லக் கூட ஒரு குரல் இல்லை” என்ற உருக்கமான தலைப்புடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் முதியோர் பராமரிப்பு மற்றும் தனிமை குறித்த விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in