LATEST NEWS
காணாமல் போன காஸ்ட்லி வாட்ச்…. தேடி கண்டுபிடிக்கும் போது மணிரத்தினத்திற்கு உதித்த ஞானோதயம்…. நாயகன் உருவான கதை…!!!
கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளாகப்போகின்றது. இப்படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகையே திருப்பி போட்டது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் தக்கலைப் என்ற திரைப்படம் உருவாக இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரபட்டாலம் நடிக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். அதைத்தொடர்ந்து சிம்பு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நாயகன் திரைப்படம் உருவான விதம் குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. நாயகன் திரைப்படம் தொடர்பான கதையை உருவாக்குவதற்கு மும்பை சென்று இருக்கிறார்கள் கமல் மற்றும் மணிரத்தினம். சென்ற இடத்தில் கமலின் காஸ்ட்லி வாட்ச் ஆனது காணாமல் போய்விட்டது.
இதனால் மிகவும் வருத்தப்பட்டுள்ளார் கமலஹாசன். ஏன் என்றால் அந்த வாட்ச் ரொம்பவும் சென்டிமென்டான வாட்ச். பின்னர் அங்கு இருக்கும் ஒரு பெரிய ஆளிடம் அழைத்துச் சென்று எப்படியோ அந்த வாட்ச்சை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த ஆளை மனதில் வைத்துக் கொண்டுதான் மணிரத்தினம் நாயகன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.