LATEST NEWS
ஜெயிச்சிட்டோம் மாறா.. ஜெய் பீம் படத்தின் உண்மை சம்பவம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் ராஜக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். காவல் துறையினர் சித்திரவதை செய்ததால் ராஜ கண்ணு உயிரிழந்தார். மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அவரது மனைவி பார்வதி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக வாதாடினார்.
அந்த வழக்கில் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராஜாக்கண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தை தழுவி சூர்யா நடித்த ஜெய் பீம் படம் இயக்கப்பட்டது.
இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ராஜாக்கண்ணுவின் உறவினர்கள் பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை அரசு வேலை வழங்குவது குறித்து நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பார்வதி தனது கணவர் ராஜாக்கண்ணுவின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 1993-ஆம் ஆண்டு நடத்திய சட்ட போராட்டத்தின் அடிப்படையில் ஜெய் பீம் படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.