LATEST NEWS
90’ஸில் கனவு கன்னியாக வலம் வந்த ரூபினி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரூபினி கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
இந்நிலையில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ் விஜயகாந்த் விஷ்ணுவர்தன் ஆகியோருடன் இணைந்து ரூபினி நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து நடித்த மனிதன், கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு ரூபிணி மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். தற்போது ரூபினிக்கு 54 வயது ஆகிறது.
இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து ரூபினியா இது ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.