LATEST NEWS
விக்ரமின் அடுத்த அவதாரம்.. தங்கலானை மிஞ்சிய 62-வது படத்தின் டைட்டில் டீசர்.. பட்டைய கிளப்பிடுவாரு போலயே..!!
இயக்குனர் எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரியா சிபு தயாரிக்கிறார். ஏற்கனவே விக்ரம் நடித்த தங்கலான் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
விக்ரமின் 62-வது படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பட குழுவினர் விக்ரமின் 62-வது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.
அந்த படத்திற்கு வீர தீர சூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் வீர தீர சூரன் படம் உருவாக உள்ளதாம். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.