இயக்குனர் பா.ரஞ்சித்- தயாரிப்பாளர் இடையே மோதலா..? அப்போ தங்கலான் படத்தின் நிலைமை..? என்ன ஆக போகுதோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் பா.ரஞ்சித்- தயாரிப்பாளர் இடையே மோதலா..? அப்போ தங்கலான் படத்தின் நிலைமை..? என்ன ஆக போகுதோ..!!

Published

on

பிரபல நடிகரான விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவானது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. சமீபத்தில் தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. வருகிற ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

Advertisement

ஆனால் VFX காட்சிகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட்டை விட 20 கோடி ரூபாய் அதிகமாக செலவாகியுள்ளது. தனது சொந்த பணத்தை பா.ரஞ்சித் படத்துக்காக செலவழித்துள்ளார்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் அக்ரீமெண்ட் போட்டுள்ளதால் கூடுதலாக செலவான பணத்தை தர வேண்டும் என பா.ரஞ்சித் தயாரிப்பாளரிடம் கேட்டு வருவதாகவும் தெரிகிறது. மேலும் தங்கலான் படத்தின் டிஜிட்டல் உரிமமும் இன்னும் விற்பனை ஆகவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement