CINEMA
விக்ரம் ரசிகர்களுக்கு HAPPY NEWS…. இன்று வெளியாகும் தங்கலான் ட்ரெய்லர்….!!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் விக்ரம். விக்ரம் நடித்த பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், ஹரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கர்நாடகாவில் இருக்கும் கேஜிஎப் தொடர்புடையது என இயக்குனரான பா ரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதோடு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
அதில் விக்ரமின் தோற்றம் இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் என்று உணர்த்திவிட்டது. இந்த படம் சுதந்திர தினத்தன்று திரையரங்கில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகின்றது. ஆனால் படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை 8 அன்று இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடுவது குறித்து படகுழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி இன்று தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகிறது. இது விக்ரம் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.