அது என்ன இன்டர்ன்ஷிப் பிராஜெக்டா?” – தவெக-வினர் கேட்ட ‘6 மாத டைம்’…!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு…!ஆட்சிக்கு வந்த ரெண்டே வாரம்… முதலமைச்சர் விஜய் மீது பாய்ந்த முதல் ‘திரைத்துறை’ விமர்சனம்! பின்னணி என்ன…! – cinefeeds
Connect with us

CINEMA

அது என்ன இன்டர்ன்ஷிப் பிராஜெக்டா?” – தவெக-வினர் கேட்ட ‘6 மாத டைம்’…!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு…!ஆட்சிக்கு வந்த ரெண்டே வாரம்… முதலமைச்சர் விஜய் மீது பாய்ந்த முதல் ‘திரைத்துறை’ விமர்சனம்! பின்னணி என்ன…!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அவரைப் பற்றிய விவாதங்கள் திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை விஜய்யை மிகக் காட்டமாக விமர்சித்து வந்த பல பிரபலங்கள், தற்போது தங்களது விமர்சனங்களைக் கைவிட்டு அமைதி காத்து வருகின்றனர். ஆனால், தேர்தல் சமயத்தில் இருந்து இப்போது வரை முதலமைச்சர் விஜய் மீதான தனது தார்மீக விமர்சனங்களை சற்றும் குறைத்துக் கொள்ளாமல், தனது தனித்துவமான பாணியில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் பிரபல நடிகை வினோதினி வைத்யநாதன்.

சமீபத்தில் இணையவாசி ஒருவர், தமிழக மக்கள் எதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்குச் செலுத்தினார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு, நடிகை வினோதினி தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் மிகவும் நையாண்டியாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார். அதில், “அண்ணா பாவம், அண்ணா ஒரு வாய்ப்புதானே கேட்கிறாரு, கொடுப்போம். மாற்றம் வேணும். அண்ணா நல்லா டான்ஸ் ஆடுவாரு, அண்ணா பார்க்க நல்லா இருக்காரு. அண்ணாவுக்கு நான் அக்காவா, தங்கையா இல்ல என்னவா வேணும்னாலும் இருப்பேன் அண்ணா… நீங்க உடம்பப் பார்த்துக்கோங்கண்ணா, எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படாதீங்க. சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ மாதிரி செஞ்சதை நிஜத்திலும் செய்வார் அண்ணா” என்று வாக்காளர்களின் மனநிலையை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Advertisement

மேலும், “தூயசக்தி அண்ணா பாவம்ல, அண்ணா முகம் வாடியிருக்கு… மாமாக்கு ஓட்டுப் போடச் சொல்லி பையன், பொண்ணு, பேரன், பேத்தி கேக்குறாங்க. எல்லாரும் அவரை சி.எம் ஆகவிடாமல் படுத்துறாங்க” என்று பொதுமக்கள் தவெக-விற்கு வாக்களித்ததற்குப் பின்னால் இருக்கும் மேலோட்டமான காரணங்களை தனது பாணியில் மிகக் கடுமையாக வினோதினி சாடியுள்ளார். தர்க்கரீதியான காரணங்கள் இன்றி, வெறும் சினிமா பிம்பத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ள இந்த கமெண்ட் செக்ஷன் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலைமையையும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து கொலை, பாலியல் கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தவெக ஐடிக்கள் பலவும் திடீரென ‘சைலண்ட் மோடுக்கு’ சென்றுவிட்டதை வினோதினி கவனித்து சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் ‘ஆறு மாதம் டைம் கொடுங்கள்’ என்று அக்கட்சியினர் கேட்பதை விமர்சித்துள்ள அவர், “அது என்ன ஆறு மாசம் டைம் குடுங்கன்னு ஏதோ இண்டர்ன்ஷிப் பிராஜக்ட் மாதிரி சொல்லுறாங்க” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த அதிரடிப் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in