“பலமுறை சாக முயன்றேன்!”.. தொகுப்பாளர் முன் கதறி அழுத பெண்.. நடுங்கிப்போன அரங்கம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CINEMA

“பலமுறை சாக முயன்றேன்!”.. தொகுப்பாளர் முன் கதறி அழுத பெண்.. நடுங்கிப்போன அரங்கம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சி, சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பல முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான தலைப்புகளைக் கையாள்கிறது. அந்த வகையில், இந்த வாரம் பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்து, நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற்றெடுத்த தம்பதிகளின் வலிகளும் வேதனைகளும் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தின்போது, பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத காரணத்தினால் சமூகத்தினர் தங்களை நோக்கி வீசிய கேலிகளையும், சொந்த பந்தங்களின் கேள்விகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு பெண் பலமுறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். இறுதிவரை போராடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குக் கிடைத்த குழந்தையைக் கொஞ்சும் அந்தத் தாய், தற்போது தான் பூலோகத்தில் இருக்கிறேனா அல்லது சொர்க்கத்தில் இருக்கிறேனா என்ற அளவுக்கு மகிழ்ச்சியில் திளைப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியது பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in