LATEST NEWS
அடக் கொடுமையே!.. கோபத்தின் உச்சிக்கு சென்ற மருமகளின் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் மாமியார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
தெலுங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் நகருக்கு அருகில் அமைந்துள்ள செந்திராபாத் சில்லட்குடா பகுதியில் 57 வயது மூதாட்டி தேவராஜ் பத்மாவதி மீது, அவரது 33 வயது மருமகள் டி. விஜயலட்சுமி சமையல் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சமையலறையில் மூதாட்டியை இழுத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, ஐதராபாத் போலீசார் உடனடியாகக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மருமகலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
57 years old Devarai Padmavathi was dragged and brutally attacked with a kitchen knife by her 33 years old Daughter-In-Law D Vijayalakshmi in Chilkalguda area of Secunderabad. Later Hyderabad Police arrested the DIL after CCTV footage of the brutal assault emerged. Neither… pic.twitter.com/Qb5ANpHPIj— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) July 23, 2026
குடும்பத் தகராறுகள் மற்றும் வன்முறை வெடிப்புகள் தற்காலத்தில் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கணவன்மார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
