CINEMA
“அடபோங்கயா… இனிமேல் எல்லாமே நான் தான்!”.. அஜித்தின் அடுத்த மாஸ் பிளான்.. கோலிவுட்டில் திடீர் பரபரப்பு..!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், தனது சுயமாக வளர்ந்த உழைப்பாலும் தனித்துவமான ஆளுமையாலும் “தல” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ‘அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆசை, வாலி, தீனா, மங்கத்தா எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கெனப் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர், எளிமை, ஒழுக்கம் மற்றும் நேர்மைக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கடந்த சில வருடங்களாகச் சினிமாவைத் தாண்டி கார் பந்தயங்களில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் கார் ரேஸிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்ததால், அவர் கேட்கும் ஊதியத்தை வழங்கத் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக, படப்பிடிப்புகள் தள்ளிப்போன சூழலில் அஜித்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்களில் நிலவி வந்தது. இந்தச் சூழலில், இனி காத்திருக்க வேண்டாம் எனக் கருதிய அஜித், தனது மனைவி ஷாலினியின் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதிலேயே தான் முதன்மை பாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கான முதற்கட்டப் பணிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் அஜித் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
