LATEST NEWS
போடு ரகிட ரகிட!.. மகளிருக்கு டபுள் ட்ரீட்.. பட்ஜெட்டில் மாஸ் காட்டப்போகும் CM விஜய்.. குஷியில் பெண்கள்..!!
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் நிதிப் பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் மற்றும் உயர்தர அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதித்து வருகிறார். இந்த ஆலோசனைகள் வரும் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மகளிருக்கான இரண்டு மிக முக்கியமான நலத்திட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம் இதில் அடங்கும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டம், ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், மகளிரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது. அதன்படி, மாநிலத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கான விரிவான திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி இரட்டை அறிவிப்புகள், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அங்கமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
