LATEST NEWS
மன உளைச்சலா..? மர்மமா..? தாயைப் பூட்டிவிட்டு… நிர்வாண நிலையில் அம்மன் சிலையுடன்…! ஏரிக்குள் குதித்த பெண் மென்பொறியாளர்…!!
ஆந்திர மாநிலம் விசியநகரத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற பெண், பெங்களூருவில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின் ஹைதராபாத் பீரிசாடிகுடா பகுதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தனது தாயார் தூங்கிய பிறகு, அவரது அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தேஜஸ்வினி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே வந்த தேஜஸ்வினி, உடைகள் ஏதுமின்றி நிர்வாண நிலையில் அருகில் இருந்த அம்மாவாரு கோயிலுக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த அம்மன் சிலையை கைகளில் எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த ஏரியை நோக்கி ஓடி, சிலையோடு ஏரிக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில் அவரது உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது, ஆனால் அவர் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை.
முதற்கட்ட விசாரணையில் தேஜஸ்வினி கடுமையான மன உளைச்சலாலும், மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தங்கியிருந்த வீட்டின் வாடகை மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால், போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தற்கொலைக்கான அசல் காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் காணாமல் போன அம்மன் சிலையைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
