CRIME
“தாலியையும் மெட்டியையும் கழட்டி வச்சுட்டேன்.. வாங்கிட்டு போ” பிள்ளைங்கள பார்க்க வரக்கூடாது… தவெக பிரமுகருடன் கள்ளக்காதல்… மனைவி எடுத்த முடிவால் கணவன் தற்கொலை செய்த கொடூரம்..!!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) சக்தி (42). ஒகேனக்கல்லில் டீ கடை நடத்தி வந்த இவருக்கும், இவரது மனைவி அனிதாவிற்கும் இடையே கடந்த சில காலமாக குடும்பப் பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில், ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்த தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் அ. கார்த்திக் என்பவருடன் அனிதாவிற்கு கடந்த இரண்டு வருடங்களாகத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தினர் கார்த்திக்கை அழைத்து எச்சரித்தும், அவர்கள் இருவரும் தங்களது உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, மனைவி அனிதா தனது கணவர் சக்தியை வீட்டை விட்டு விரட்டியடித்ததால், அவர் கடந்த ஒரு மாதமாகத் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சக்தி தனது மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்தபோது, அனிதா வர மறுத்துள்ளதுடன், “அவர் கட்டிய தாலியையும் மெட்டியையும் கழற்றி வைத்துள்ளேன், அதை வாங்கிச் செல்லுங்கள்; குழந்தைகளையும் பார்க்கக் கூடாது” என்று கூறி சண்டை போட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சக்தி, மறுநாளான ஆகஸ்ட் 6-ம் தேதி தனது பூதிப்பட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகன் தற்கொலைக்குக் காரணமான மருமகள் அனிதா மற்றும் தவெக நிர்வாகி கார்த்தி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சக்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தருமபுரி மாவட்ட எஸ்பி (SP) அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது மனு கொடுக்க வந்த உறவினர்களில் ஒரு பெண், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அதைச் சோதனை செய்து பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுக்க வந்த பெண் மண்ணெண்ணெயுடன் வந்ததால் எஸ்பி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
