“குடும்பமே வேணாம்னு கள்ளகாதலனோடு ஓடிய மனைவி” ஊர் திரும்பிய மின்வாரிய ஊழியர்… தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணனுக்கு காத்திருந்த பயங்கரம் – திருவண்ணாமலையில் ரத்தக் களறி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குடும்பமே வேணாம்னு கள்ளகாதலனோடு ஓடிய மனைவி” ஊர் திரும்பிய மின்வாரிய ஊழியர்… தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணனுக்கு காத்திருந்த பயங்கரம் – திருவண்ணாமலையில் ரத்தக் களறி..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில், கள்ளக்காதல் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் ஜம்பு என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ஊழியரான சரத்குமார் (30) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான அருணா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் குடும்பம் நடத்தி வந்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

கடந்த வாரம் பணி நிமித்தமாகச் சரத்குமார் மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். இதனை அறிந்த அருணாவின் அண்ணன் அய்யனார், தாய் பவானி மற்றும் கணவர் அண்ணாமலை ஆகியோர் சரத்குமாரிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருதரப்பும் மோதிக்கொண்டனர். அப்போது அய்யனார் தனது கத்தியால் சரத்குமாரைக் குத்தப் பாய்ந்தபோது, தம்பியைக் காப்பாற்ற அண்ணன் ஜம்பு குறுக்கே வந்துள்ளார். இதில் அய்யனார் வீசிய கத்தி ஜம்புவின் வயிற்றில் பலமாக இறங்கியதில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அய்யனார், அவரது தாய் பவானி மற்றும் அருணாவின் கணவர் அண்ணாமலை ஆகிய 3 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனிடையே, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஜம்புவின் உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பதற்றம் நிலவியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in