நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்னு யாருக்கும் தெரியாது… சிரிச்சுக்கிட்டே வீடியோ போட்ட பெண்… ஒரே வீடியோவில் அம்பலமான பல லட்ச ரூபாய் மோசடி… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்னு யாருக்கும் தெரியாது… சிரிச்சுக்கிட்டே வீடியோ போட்ட பெண்… ஒரே வீடியோவில் அம்பலமான பல லட்ச ரூபாய் மோசடி… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் பொய் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்த திருப்தி சிங் ராஜ்புத் என்ற பெண்ணும், அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் சுதான்ஷு சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிவப்பு நிறப் புடவைகளில் மூன்று பெண்கள் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், “நாங்கள் மத்தியப் பிரதேச சட்டசபை வளாகத்தில் இருக்கிறோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்தால் நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று யாருக்கும் தெரியாது” என்று கூறிச் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. போபால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சட்டசபையில் எடுக்கப்படவில்லை என்றும், அது மானுடவியல் அருங்காட்சியக வளாகத்தில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

வீடியோவில் இடம்பெற்ற மற்ற இரு பெண்களிடம் விசாரித்தபோது, திருப்தி சிங் தான் தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல நடிக்கச் சொன்னதாகவும், தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்குவதாக நம்ப வைத்து தலா ரூ. 3 லட்சம் வரை வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தனர். சுற்றுலாத் துறை சொத்துகளை குத்தகைக்கு விடுவதாகவும், பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் திருப்தி சிங் பணம் பறித்துள்ளார். 2025 ஏப்ரல் மாதம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் ரூ. 9.80 லட்சம் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களைப் பெற்று ஏமாற்றியதுதான் இவருக்கு எதிராகப் பதிவான முதல் வழக்காகும். இவர் மீது அசோக் நகர் மற்றும் போபால் காவல் நிலையங்களில் 3 எப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

போபாலில் உள்ள திருப்தி சிங்கின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில், அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், லெட்டர் ஹெட்கள், பணி நியமன ஆணைகள், நினைவுப் பரிசுகள், ‘இந்திய அரசு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா கார் மற்றும் போலி சி.பி.ஐ அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பிம்பத்தை நம்பியே திருப்தியைத் திருமணம் செய்து கொண்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக திருப்தி தனது மடிக்கணினியிலிருந்த பல ஆவணங்களை அழித்துள்ள நிலையில், இவருக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in