“என் மனைவியைக் காப்பாத்துங்க..” காதல் திருமணத்திற்கு வந்த எதிர்ப்பு.! மணமகனை அடித்து துவைத்துவிட்டு பெண்ணைக் கடத்திய பெற்றோர்..! நடுரோட்டில் நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மனைவியைக் காப்பாத்துங்க..” காதல் திருமணத்திற்கு வந்த எதிர்ப்பு.! மணமகனை அடித்து துவைத்துவிட்டு பெண்ணைக் கடத்திய பெற்றோர்..! நடுரோட்டில் நடந்த கொடூரம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா பகுதியில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீது பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தி, மனைவியை பலவந்தமாக கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜ்பால் ராஜ்புத் மற்றும் தஞ்ஜீம் மன்சூரி ஆகியோர் காண்ட்வாவில் உள்ள மகாதேவ்கர் கோவிலில் வேத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை.

திருமணம் முடிந்ததும், இந்த ஜோடி சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் நோட்டரி நடைமுறைகளை முடிக்க மாலிகுவான் பகுதிக்குச் சென்றது. அப்போது அங்கு வந்த பெண்ணின் குடும்பத்தினர், மணமகன் தேஜ்பாலை கடுமையாகத் தாக்கியதுடன், நடுரோட்டிலேயே பெண்ணை இழுத்துச் சென்று பலவந்தமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் மிகுந்த அச்சத்தில் உள்ளார். அவர் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் போலீசாரிடம் வழங்கி, சிட்டி கொத்வாலி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மேலும், தனது மனைவியைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in