“நாங்க வந்து எம்புட்டு நாளாச்சு..?” இன்னும் ஒரு பதவியும் கொடுக்கல.. கதறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… மூத்த நிர்வாகிகளின் பதிலால் கடுப்பான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க வந்து எம்புட்டு நாளாச்சு..?” இன்னும் ஒரு பதவியும் கொடுக்கல.. கதறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… மூத்த நிர்வாகிகளின் பதிலால் கடுப்பான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு..!

Published

on

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த கட்சிப் பதவிகள் வழங்கப்படாததால் கட்சிக்குள் கடுமையான அதிருப்தி நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இணையும் போது தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று இந்தத் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களிடம் மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் தவெகவின் மூத்த நிர்வாகிகளிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து முறையிட்டபோது, “இதுபற்றி முதலமைச்சர் விஜய்யிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம்” என்று அவர்கள் மழுப்பலாகப் பதிலளிப்பதாகத் தெரிகிறது. இதனால், எதிர்பார்த்த முக்கியப் பதவிகள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ள முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தியும், உள்கட்சிப் பூசலும் தவெக வட்டாரத்தில் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in