அடப்பாவி… வெளியே பார்த்தா படிக்கிற நோட்டு.. உள்ளே பார்த்தா வெளிநாட்டு சரக்கு…! மாஸ்டர் பிளான் போட்டும் மாட்டிய ஆட்டோ ஓட்டுநர்… பீகாரில் அம்பலமான விசித்திரமான கடத்தல் நெட்வொர்க்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவி… வெளியே பார்த்தா படிக்கிற நோட்டு.. உள்ளே பார்த்தா வெளிநாட்டு சரக்கு…! மாஸ்டர் பிளான் போட்டும் மாட்டிய ஆட்டோ ஓட்டுநர்… பீகாரில் அம்பலமான விசித்திரமான கடத்தல் நெட்வொர்க்..!!

Published

on

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மதுவிலக்குத் துறையினர் நடத்திய சோதனையில், நோட்டுப் புத்தகங்களுக்குள் மதுப்பாட்டில்களை மறைத்து கடத்தி வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் சந்தேகம் வராத வகையில், நோட்டுப் புத்தகங்களின் நடுப்பகுதியை வெட்டி, அதனுள் மதுப்பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரண நோட்டுப் புத்தகக் கட்டுகள் போல் தெரிந்த இந்தச் சோதனையின் முடிவில், கடத்தல்காரர்களின் இந்த புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 360 வெளிநாட்டு மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் சத்தாம் அன்சாரி என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட மதுவிலக்குத் துறையின் குழுவினர், அகியாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீகன்பூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு ஆட்டோவை மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆட்டோவில் பல நோட்டுப் புத்தகக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் பார்வையில் அவை சாதாரண பொருட்களாகத் தெரிந்தாலும், அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அந்த நோட்டுப் புத்தகக் கட்டுகளைப் பிரித்துப் பார்த்தபோதுதான், அவற்றைக் கத்தரித்து நடுவில் மதுப்பாட்டில்கள் மிக சாதுரியமாகப் பேக் செய்யப்பட்டிருந்தது அம்பலமானது.

Advertisement

இந்தச் சோதனையின்போது பிடிபட்ட மதுப்பாட்டில்கள் அனைத்தும் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை என்று மதுவிலக்குத் துறை ஆய்வாளர் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் ராஜா ஜன்மேஜய் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் மீது மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு வருகிறார். மதுக்கடத்தல்காரர்கள் தொடர்ந்து இதுபோன்ற புதிய முறைகளைக் கையாண்டு வருவதாகவும், அதைக் கண்காணிக்கத் துறை தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in