“இந்த டீ கடையின் பாலும் தாய்ப்பாலே” 35 வருடங்களாக பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச பால்… நன்கொடை வாங்காமல் அண்ணன் காட்டிய வழியில் தம்பி நடத்தும் டீ கடையின் நெகிழ்ச்சி மிராக்கிள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்த டீ கடையின் பாலும் தாய்ப்பாலே” 35 வருடங்களாக பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச பால்… நன்கொடை வாங்காமல் அண்ணன் காட்டிய வழியில் தம்பி நடத்தும் டீ கடையின் நெகிழ்ச்சி மிராக்கிள்…!!!

Published

on

பிஹாரைச் சேர்ந்த ஷரவன் குமார் என்பவரின் தேநீர்க் கடை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு தாய் மடியாக மாறிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த ஏழைத் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்குக் குடிக்கப் பால் கூடக் கொடுக்க முடியாமல் வறுமையில் தவிப்பதைக் கண்டு ஷ்ரவன் குமார் கடும் மனவேதனை அடைந்தார். இந்த அவல நிலையைப் போக்க எண்ணிய அவர், தனது தேநீர்க் கடையின் மூலம் ஒரு மகத்தான இலவச சேவைத் திட்டத்தைத் தொடங்கினார்.

இந்தக் கடையில் 18 மாதங்கள் வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடக் கூடாது என்ற உன்னத நோக்கில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காலப்போக்கில் இந்தச் சேவை தொய்வின்றித் தொடர்வதை உறுதி செய்த ஷ்ரவன் குமாரின் மறைவிற்குப் பிறகும், அவரது தம்பி ரஞ்சித் குமார் தற்போது இந்த உன்னதப் பணியைத் தொண்டராகத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

Advertisement

மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வரும் இந்த இலவச சேவைக்காக, அவர்கள் யாரிடமிருந்தும் எந்தவொரு நன்கொடையோ அல்லது நிதியுதவியோ பெறுவதில்லை. தங்களின் தேநீர்க் கடையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இந்த தர்ம காரியத்தை அவர்கள் இன்முகத்தோடு செய்து வருகின்றனர். சுயநலமற்ற இவர்களின் இந்த மனிதநேயச் சேவை உண்மையிலேயே பார்ப்போர் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in