CINEMA
“TN07 CM” கணிப்பு நிஜமானது..! கோட் படம் ரிலீஸாகி 2 வருஷம்.. விஜய் ரசிகர்களை நெகிழ வைத்த வெங்கட் பிரபுவின் வைரல் வீடியோ..!!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ (The Greatest Of All Time – GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திரைக்கு வந்த இத்திரைப்படம், உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்ததுடன், விஜய்யின் முழு நேர அரசியல் வருகைக்கு முந்தைய மிக முக்கியமான திரைப்படமாகவும் அமைந்தது.
வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அந்த நினைவலை வீடியோ, ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி, படத்தில் விஜய் முதலமைச்சராக வருவதும் நிஜ அரசியலில் அவர் குறித்த எதிர்பார்ப்புகளும் அருகருகே ஒப்பிடப்பட்டு நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா” என்ற வரிகளுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெற்ற “TN07 CM 2026” வாகனப் பெயர் பலகை, விஜய் முதலச்சராவதை முன்கூட்டியே கணித்தது போல் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, படத்தின் மாஸ் வசனங்களுடன் நிஜக் காட்சிகளை இணைத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளனர்.
