அஞ்சலி படத்தில் தொடங்கிய பயணம்…விஜய்யின் ‘கோட்’ பட வெற்றிக்குப் பின்…இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குள் இப்படி ஒரு திறமையா? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையிலா?…வெங்கட் பிரபுவின் பழைய சீக்ரெட் வைரல்…! – cinefeeds
Connect with us

CINEMA

அஞ்சலி படத்தில் தொடங்கிய பயணம்…விஜய்யின் ‘கோட்’ பட வெற்றிக்குப் பின்…இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குள் இப்படி ஒரு திறமையா? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையிலா?…வெங்கட் பிரபுவின் பழைய சீக்ரெட் வைரல்…!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘கோட்’ (The Greatest Of All Time) திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் வெங்கட் பிரபு கூட்டணி அமைப்பதாக இருந்தது; ஆனால் எதிர்பாராதவிதமாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் இருந்து விலகியதால், தற்போது மற்ற முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இயக்குனர், நடிகர் என்பதைத் தாண்டி வெங்கட் பிரபு ஒரு சிறந்த பாடகர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 வெங்கட் பிரபுவிற்கு சிறுவயதில் இருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியான புகழ்பெற்ற ‘அஞ்சலி’ திரைப்படத்தில் வரும் குழந்தைகள் குரல்களில் வெங்கட் பிரபுவின் குரலும் ஒன்றாகும். அப்படத்தில் சுமார் 5 பாடல்களுக்கு அவர் கோரஸ் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் ராஜா இசையில் ‘அலெக்சாண்டர்’, ‘உல்லாசம்’ போன்ற திரைப்படங்களிலும், யுவன் சங்கர் ராஜா இசையில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இடம்பெற்ற “நெருப்பு கூத்தடிக்குது” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் பாடி அசத்தியுள்ளார். மணிசர்மா, பிரேம்ஜி, கங்கை அமரன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.

Advertisement

 பல்வேறு இசையமைப்பாளர்களின் கீழ் பாடியுள்ள வெங்கட் பிரபு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. புகழ்பெற்ற பாடகர்களான எஸ்.பி.பி.சரண் மற்றும் சின்மயி ஆகியோருடன் இணைந்து வெங்கட் பிரபு பாடிய அந்தத் துள்ளலான பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இன்றும் இடம்பிடித்துள்ளது. ‘கோட்’ படத்தில் முதல்வர் விஜய்க்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தது, மங்காத்தாவில் நாகர்ஜுனா நடிக்கவிருந்த ரகசியம் என எப்போதும் செய்திகளில் இருக்கும் வெங்கட் பிரபுவின் இந்த பாடகர் முகம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in