CINEMA
அஜித் சொன்ன அந்த விஷயம்…. ஓப்பனாக பேசிய வெங்கட் பிரபு…. இணையத்தில் வைரல்..!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.இந்த படம் முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்த
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் சாருக்கு திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அஜித் என்னிடம், டேய் படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் என்று சொன்னதாக கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.