CINEMA
“விஜய் அண்ணாவை விட்டுருங்க..” சுகந்திர தினப் புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா..” நெட்டிசன்கள் வச்சு செய்யும் அந்த ஷாக்கிங் கமெண்ட்ஸ்.. இணையத்தில் வைரலாகும் ஹாட் டாபிக்..!!
சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80ஆவது சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு பெரும் கவனம் பெற்றது. இந்த விழாவில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது இணையத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த விழாவில் தான் அணிந்திருந்த உடையில் த்ரிஷா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கமாக அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு மாறாக, இந்நிகழ்வைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான மற்றும் கிண்டலான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, “விஜய் அண்ணா கூட இதுக்கு அப்புறம் போனா செருப்பு பிஞ்சிடும்” என்றும், மற்றொருவர் “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன், விஜய் அண்ணா விட்டுிருங்க” என்றும் நேரடியாவே கலாய்த்து கமெண்ட் செய்து வருவதுடன், இந்தச் சமூக வலைத்தள விவாதங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
https://www.instagram.com/p/DcF9h7SGfUD/?utm_source=ig_embed&ig_rid=A55Bz7DQPv3UWMhS8rTEaZn
முன்னாள் நடிகர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் தொடர்பான விவகாரங்களுக்குப் பிறகு, த்ரிஷா மற்றும் இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் சுதந்திர தின விழாவில் அவர் முன்னிலை வரிசையில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தனது வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். வதந்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காமல் அவர் பதிவிடும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

