CINEMA
“விஜய்க்கு சப்போர்ட் பண்ணது என் தப்புதான்..!” கரண்ட் பில் பிரச்சனையில் கொந்தளித்த நடிகை வைஷாலி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!
தவெக ஆதரவாளராக அறியப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி, தமிழகத்தின் தற்போதைய மின்சாரக் கட்டண உயர்வைப் பற்றிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தற்போதைய மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அறிவிக்கும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் கூட எங்களுக்கு வேண்டாம் என்றும், மாறாக எந்தப் புகாருமன்றி முறையாகவும் நியாயமாகவும் கணக்கிட்டு மின்சாரப் பில் வசூலித்தாலே பொதுமக்களுக்குப் போதுமானது என்றும் அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.
https://www.instagram.com/reel/Db7PHylID70/?utm_source=ig_web_button_share_sheet
இதோடு நிறுத்திக் கொள்ளாமல், தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தவெக அரசு அமைத்த முதலமைச்சருமான விஜய் போட்ட முதல் கையெழுத்தை வரவேற்றுத் தான் முன்பு வீடியோ வெளியிட்டதற்காக தற்போது வருந்துவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அந்த ஆரம்பகால வாக்குறுதிகளையும் முடிவுகளையும் நம்பி ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலைமையைப் பார்த்து அந்த ஆதரவு வீடியோவை வெளியிட்டதற்காக வருத்தப்படுவதாகக் கூறியுள்ளது அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
