LATEST NEWS
திக் திக் திக்..! “181 பேரின் உயிர் ஊசலாடிய நிமிடங்கள்..!” நடுவானில் திடீரென என்ஜினில் இருந்து கிளம்பிய தீப் பிளம்புகள்.. அடுத்த நொடியே நடந்த அதிசயம்.. இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம், தென் கரரோலினாவில் உள்ள மைர்ட்டில் பீச் விமான நிலையத்திலிருந்து வட கரரோலினாவில் உள்ள சார்லட்நகரை நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இடதுபுற என்ஜினில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து என்ஜினில் இருந்து தீப்பொறியும் அடர்ந்த புகையும் வெளியேறத் தொடங்கின. 172 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் பயணித்த அந்த விமானத்தில் இந்த ஆபத்தான சூழ்நிலை உருவானதும், விமானி உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு, “மேடே, மேடே, மேடே… எங்கள் என்ஜினில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என்ற செய்தியை ரேடியோவில் தெரிவித்தார்.
American Airlines की फ़्लाइट Boeing 737 के टेक-ऑफ के तुरंत बाद विमान के बाएं इंजन से तेज़ आवाज आई. साथ ही आग की लपटें और धुआँ भी निकलने लगा.
प्लेन में 172 यात्री और 9 क्रू मेंबर सहित कुल 181 लोग सवार थे.
विमान ने मर्टल बीच, South Carolina से शार्लेट, North Carolina के लिए उड़ान… pic.twitter.com/J82vOQxLXQ— Ruby Arun रूबी अरुण (@arunruby08) August 11, 2026
வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச அளவில் கப்பல்கள் மற்றும் விமானங்களில் உயிருக்கு ஆபத்தான மிகக் கடுமையான சூழ்நிலை ஏற்படும்போது மட்டுமே “மேடே” என்ற சொல் மூன்று முறை பயன்படுத்தப்படும். விமானி மற்றும் விமானப் பணியாளர்களின் சமயோசிதமான மற்றும் துரிதமான செயல்பாட்டால், கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு அசம்பாவிதம் ஏதுமின்றி விமானம் மீண்டும் மைர்ட்டில் பீச் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 181 பேரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
