“என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துறீங்க” பட்டியலின தலைவர் என்பதால் அவமதிப்பா.? நான் பேசிய மேடையில் ஹோமம் வளர்த்து சுத்தம் பண்ணுறீங்க… நாடாளுமன்றத்தில் கொந்தளித்த மல்லிகார்ஜுன கார்கே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துறீங்க” பட்டியலின தலைவர் என்பதால் அவமதிப்பா.? நான் பேசிய மேடையில் ஹோமம் வளர்த்து சுத்தம் பண்ணுறீங்க… நாடாளுமன்றத்தில் கொந்தளித்த மல்லிகார்ஜுன கார்கே..!!

Published

on

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகைமைக்குறைவாகவும், தீண்டாமைக் கொடுமையுடனும் நடத்தப்பட்டதாகக் கூறி இன்று அவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார். உத்தரகாண்டில் தான் பேசி முடித்த மேடையை ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் ஹோமம் வளர்த்து ‘சுத்தம்’ செய்ததாகக் கூறி அவர் மிகுந்த மனவேதனையுடன் இதனைப் பதிவு செய்தார். தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கார்கே பங்கேற்றுப் பேசிச் சென்ற பிறகு, ஆகஸ்ட் 10 அன்று ‘ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கட்டன்’ என்ற இந்துத்துவா அமைப்பு அந்த மேடையில் ஹோமம் நடத்தியுள்ளது. மைதானத்தின் ஆன்மீகப் புனிதத்தைக் காக்கவே இந்தச் சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் விளக்கம் அளித்தாலும், இது தன்னை அவமானப்படுத்தும் செயல் என கார்கே கடுமையாகச் சாடினார்.

Advertisement

இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கார்கே மாநிலங்களவையில் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, கார்கேவின் உணர்வுகள் காயப்பட்டதற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பா.ஜ.க இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in