தேசமே உறைந்து போன சோகம்… செங்கோலின் வரலாற்றுச் சிற்பி உம்மிடி எத்திராஜ் மறைவு..! பிரதமர் மோடி இரங்கல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தேசமே உறைந்து போன சோகம்… செங்கோலின் வரலாற்றுச் சிற்பி உம்மிடி எத்திராஜ் மறைவு..! பிரதமர் மோடி இரங்கல்..!!

Published

on

இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றிய உம்மிடி எத்திராஜ் சென்னையில் காலமானார். 1926-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிறந்த அவர், அடுத்த மாதம் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில் காலமடைந்துள்ளார். மேலும், இவர் 125 ஆண்டுகள் பழமையான உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரம் கைமாறியதைக் குறிக்கும் சின்னமான செங்கோல் வடிவமைப்பில் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தமிழ்நாட்டின் திருவாடுதுறை ஆதின மடத்தால் வழங்கப்பட்ட இந்த செங்கோல், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், பின்னர் 2023 மே 28 அன்று பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்பட்டு வைக்கப்பட்டது.

Advertisement

உம்மிடி எத்திராஜின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in