LATEST NEWS
சோகம் தாங்க முடியல.. திருவாரூரில் டிராக்டர் உழுதபோது மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பரிதாப பலி..! முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்..!!
திருவாரூர் மாவட்டம் புதூரில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயக் கூலி வேலை செய்து வந்த தந்தை ராஜா மற்றும் அவரது மகன் ஆதித்யா ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை-மகன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்து, தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தவெக சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
