LATEST NEWS
“என்னங்க எழுந்திரிங்க” கணவர் இறந்ததை ஏற்க முடியாமல் கைகளைப் பிடித்து எழுப்பத் துடித்த மனைவி… திருவாரூரில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
திருவாரூரில் நடந்த சாலை விபத்தில் கணவர் உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை எழுப்பத் துடித்த மனைவியின் பாசப் போராட்டம் பார்ப்போரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரமான விபத்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த சங்கர் ரான் (80) என்பவர் மீது, எதிர்பாராதவிதமாக நகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீர் அகற்றும் வாகனம் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கடுமையான பாதிப்பால் முதியவர் சங்கர் ரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அவரது மனைவி, கணவர் உயிரிழந்ததை ஏற்க முடியாமல் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு அழுது புலம்பியுள்ளார். “எழுந்திருங்கள்” எனக்கூறி கணவரை மீண்டும் எழுப்ப அவர் துடித்தக் காட்சி அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்களின் நெஞ்சை உருக வைப்பதாக இருந்தது.
