LATEST NEWS
“இவங்கள சும்மா விடக்கூடாது..” 28 கிலோ அரிசி வாங்குனா 10 கிலோ காணாம போகுது… ரேஷன் கடையில் அம்பலமான பகீர் திருட்டு..! கொதித்தெழுந்த பொதுமக்கள்..!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை வைத்துப் பொருட்கள் வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேஷன் கடை ஊழியர் இத்தகைய திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “கடையில் 28 கிலோ அரிசி வாங்கிச் சென்று வெளியில் உள்ள கடைகளில் மீண்டும் அளந்து பார்த்தால், அதில் 18 கிலோ மட்டுமே இருக்கிறது. எடை அளவு குறைவாக இருப்பது குறித்து பல முறை ரேஷன் கடை ஊழியர்களிடம் கூறியும், அவர்கள் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து இதேபோன்று நடந்து கொள்கின்றனர்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
ரேஷன் பொருட்கள் முறையாகவும் முழு அளவிலும் கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள், பொருட்களின் எடையில் முறைகேடு செய்து வரும் ஊழியர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
