CRIME
மனைவியை கொ** செய்து.. கையில் தலையோடு கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டுவிட்டு… கணவன் செய்த காரியத்தால் பெரும் பயங்கரம்..!!
மேற்கு வங்க மாநிலம் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையுடன் கணவன் சாலையில் உலா வந்த நெஞ்சைப் பதறவைக்கும் பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த ரிந்து கோஷ் என்பவர், தனது மனைவி சீமா சர்க்கார் கோஷுடன் ஏற்பட்ட தகராறில் இந்த அதிர்ச்சிக்குரிய செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆயுதத்தால் மனைவியின் தலையைத் துண்டித்த கோஷ், அந்தத் தலையைத் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் அப்பகுதியின் வீதிகளில் நடந்து சென்றுள்ளார். பின்னர், அருகில் இருந்த உள்ளூர் கோயில் ஒன்றுக்குச் சென்று, துண்டிக்கப்பட்ட தலையை அருகில் வைத்துவிட்டு, கைகளை உயர்த்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கடும் பீதிக்குள்ளாகினர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கங்காராம்பூர் காவல் நிலையப் போலீசார், கோஷைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தைப் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இது தம்பதியினருக்கு இடையேயான குடும்பச் சண்டையால் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரின் மனநிலை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
