LATEST NEWS
ஐய்யோ கொடுமையே..! மருத்துவமனை கழிப்பறையில் பிஞ்சு குழந்தையை நசுக்கிக் கொன்ற கொடூரம்…! பெற்ற தாயே செய்த காரியமா அல்லது திட்டமிட்ட கொலையா…? போலீஸ் தீவிர விசாரணை..!!
தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் உள்ள அரசு சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையில் பிறந்த குழந்தை ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில், குழந்தையின் உடல் நசுக்கப்பட்டு சடலமாகக் கிடப்பதைக் கண்டு மருத்துவமனை ஊழியர்களும் உள்ளூர் மக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சதாசிவபேட்டை காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்தனர். குழந்தை இந்தச் சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டதா அல்லது வேறு எங்கேனும் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு இங்கு கொண்டு வந்து வீசப்பட்டதா என்ற கோணங்களில் மூத்த காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொடூர குற்றத்தைச் செய்த குற்றவாளியைக் கண்டறிய சமுதாய சுகாதார மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சமீபத்தில் பிரசவம் முடித்த பெண்களின் விவரங்களைச் சேகரித்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையைப்பெற்ற தாயே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீஸார் அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர்.
