LATEST NEWS
“புகைப்பிடித்த கண்டக்டர் சஸ்பெண்ட்… ஆனா ஓட்டுநர் செஞ்ச தில்லாலங்கடி வேலையைப் பாருங்க..!” அதிரவைக்கும் ட்விஸ்ட்.. இணையத்தை அலறவிட்ட பகீர் வீடியோ..!!
கிருஷ்ணகிரியில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், பயணிகள் செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு நடத்துநர் சிகரெட் புகைத்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; ஆனால், அந்த வைரல் வீடியோவைச் சரியாகக் கவனித்தால், பேருந்தை இயக்கிய அந்த ஓட்டுநரே தனது கவனத்தை முழுமையாகச் சாலைகளில் செலுத்தாமல் செல்போனில் ஆபத்தான முறையில் வீடியோ பதிவு செய்துள்ளது அப்பட்டமாகத் தெரியவருகிறது.
ஓட்டுநரே வேட்டு வைத்த கதை!
திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி அரசு பஸ்ல பயணிகளுக்கு இடையூறா உட்கார்ந்து சிகரெட் குடிச்ச கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. வீடியோ வேற வைரல் ஆகுது.
ஆனா அந்த வீடியோவை பார்த்தா தெரியுது, டிரைவர்தான் பஸ் ஓட்டிக்கிட்டே வீடியோ எடுத்திருக்காரு.
சிகரெட்… pic.twitter.com/jYB3m0xkft— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) August 13, 2026
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்தை இயக்கும்போது இது போன்ற கவனச்சிதறலை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுநர் செல்போனில் வீடியோ எடுப்பது எவ்வளவு பெரிய ஆபத்து மற்றும் கண்டிக்கத்தக்க தவறு என்ற நியாயமான கேள்வி தற்போது எழுந்துள்ளதுடன், புகைப்பிடித்த நடத்துநர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது போல, அத்தகைய ஆபத்தான சூழலில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் வீடியோ பதிவு செய்த ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
