“நாலு செவுத்துக்குள் நரக வேதனை.. எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது..!” கதறி அழுத ஜாய் கிரிஸில்டா… இணையத்தை உலுக்கும் கண்ணீர் பேட்டி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நாலு செவுத்துக்குள் நரக வேதனை.. எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது..!” கதறி அழுத ஜாய் கிரிஸில்டா… இணையத்தை உலுக்கும் கண்ணீர் பேட்டி..!!

Published

on

பிரபல சமையல் கலைஞரும் ‘குக் வித் கோமாளி’ நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுக்கும் இடையே கடந்த ஆண்டு விவாகரத்து மற்றும் குழந்தையின் பிதுர்தன்மை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, ரங்கராஜ் தனது குழந்தையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட நிலையில், மகனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அண்மையில் அளித்த பேட்டியொன்றில் பேசிய ஜாய் கிரிஸில்டா, அந்தப் போராட்டக் காலத்தில் தான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து உடைந்துபோனதாகத் உருக்கமாகக் கூறியுள்ளார். நாலு சுவருக்குள் நடந்த நிஜ வாழ்க்கை தெரியாமல் பலர் விமர்சித்த போதிலும், தனது மகன் ‘ராகா’வின் அடையாளம் நாளை கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே தைரியமாகப் போராடியதாகத் தெரிவித்துள்ளார். தான் ஒரு அம்மாவாக வெற்றி பெற்றதை விட, தன் மகனுக்குச் சரியான முகவரியை வாங்கித் தந்துவிட்டதில் பெருமையடைவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in