CINEMA
டி.என்.ஏ சோதனை முடிவு… அதிர்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ்…முடிவுக்கு வந்த சிந்துபாத் கதை! கணவரின் நெருங்கிய நண்பரை பொதுவெளியில் சந்தித்த ஜாய்… வைரலாகும் வீடியோ…
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் ரகசிய இரண்டாவது திருமணம், கடந்த சில மாதங்களாக பெரும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக சுமுக முடிவுக்கு வந்துள்ளது. ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட நாயகனும், ‘குக் வித் கோமாளி’ நடுவருமான ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி இருக்கும் நிலையில், அவர் ஜாயை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரங்கராஜ் விலக முயன்றதால், ஜாய் காவல் துறையிலும் ஊடகங்களிலும் நியாயத்திற்காகப் போராடத் தொடங்கினார்.
இந்தச் சிக்கல் நீதிமன்றம் வரை சென்ற சூழலில், ஜாய்க்குப் பிறந்த குழந்தை தன்னுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்று ரங்கராஜ் நிபந்தனை விதித்தார். ஆரம்பத்தில் இந்தச் சோதனைக்கு அவர் காலம் தாழ்த்தினாலும், இறுதியில் நீதிமன்ற உத்தரவின்படி சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில், குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ‘செக் மேட்’ வைக்கப்பட்டது. இதன் விளைவாக, ரங்கராஜ் தன் தவறை உணர்ந்து மனைவியையும் குழந்தையையும் ஏற்றுக்கொண்டதால், இந்த நீண்ட நாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது இந்தத் தம்பதியினர் சுமுகமாக வாழ்ந்து வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் ரங்கராஜின் நெருங்கிய நண்பரான செஃப் தாமுவை எதேச்சையாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, தங்களது வீட்டிற்கு உணவருந்த வருமாறும் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார். கணவரின் நெருங்கிய நண்பருக்கு ஜாய் கொடுத்த இந்த உரிய மரியாதையையும் பாசத்தையும் கண்ட ரசிகர்கள், அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி, ஜாயின் பக்குவமான குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.
