CINEMA
BREAKING: ஜனநாயகன் படத்திற்கு A சான்று… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருந்தது. இருப்பினும், படத்தின் சில காட்சிகள் மற்றும் அரசியல் வசனங்கள் தொடர்பாக எழுந்த சென்சார் தணிக்கை விவகாரங்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது தணிக்கைக் குழுவின் திருத்தப் பரிந்துரைகளுக்குப் பிறகு, 3 மணி நேரம் 3 நிமிடங்கள் (183 நிமிடங்கள்) ஓடக்கூடிய இப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளதாகக் கருதப்படும் இத்திரைப்படத்தை 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் பார்க்க அனுமதியுண்டு. நீண்ட இழுபறிக்குப் பிறகு தணிக்கைச் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால், ஜூலை மாத இறுதியில் ‘ஜனநாயகன்’ உலகளவில் மிக விரைவில் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
