“தற்போதைக்கு அது வராது.. ஆனா 15,000 பேருக்கு வேலை உறுதி”.. மின்துறை அமைச்சரின் அதிரடி முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தற்போதைக்கு அது வராது.. ஆனா 15,000 பேருக்கு வேலை உறுதி”.. மின்துறை அமைச்சரின் அதிரடி முடிவு..!!

Published

on

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இதற்கான எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் பரவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு இத்திட்டம் குறித்து முக்கிய விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், “மின்சார வாரியத்தில் முதல் கட்டமாக ஏறத்தாழ 15,000 புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மின் துறையில் தற்போது நிலவி வரும் அடிப்படை பிரச்சனைகளை களைந்து, கட்டமைப்பை சீரமைப்பதே எங்களது தற்போதைய முதல் பணியாகும். மின்வாரியத்தைச் சீரமைத்த பின்னரே, அடுத்தகட்டமாக ஸ்மார்ட் மீட்டர் வசதி குறித்து விரிவான ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையேயும் மின்வாரிய ஊழியர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in