பகீர் கிளப்பும் புது டிரெண்ட்..! டப்பில் காலை கழுவி ஜூஸ் விற்ற பெண்கள்.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… அருவருப்பில் உறைந்த இணையவாசிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர் கிளப்பும் புது டிரெண்ட்..! டப்பில் காலை கழுவி ஜூஸ் விற்ற பெண்கள்.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… அருவருப்பில் உறைந்த இணையவாசிகள்..!!

Published

on

சீனாவின் குவாங்ஜோ நகரில் நடைபெற்ற ‘ஃபயர்ஃபிளை காமிக் கன்வென்ஷன்’ என்ற அனிமே திருவிழாவில், சில பெண் காஸ்பிளேயர்கள் தங்களது நைலான் காலுறைகள் அணிந்த கால்களை எலுமிச்சை பழங்கள் மிதக்கும் தண்ணீர் தொட்டியில் நனைத்து, அதனை ‘ஃபுட் ஜூஸ்’ என்ற பெயரில் விற்ற வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விசித்திரமான விளம்பர உத்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாலில், பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர்களின் கால்கள் நனைந்திருந்த அதே தொட்டியில் இருந்து எலுமிச்சை சாறு எடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கப் எலுமிச்சை சாற்றின் விலை 50 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 670 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு அருவருப்பான முறையில் தயாரிக்கப்பட்ட போதிலும், அதனை வாங்குவதற்கும், பெண்களின் கால்களில் இருந்து சொட்டும் துளிகளை தரையில் படுத்துக் குடிக்கவும் சிலர் ஆர்வம் காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அங்கு ‘இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும், சுகாதாரக் கேடான இந்த செயல் குறித்த புகைப்படங்கள் சீன சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “மக்களின் புத்திக்கு என்னாச்சு?”, “சுகாதார விதிகளையெல்லாம் மறந்துவிட்டார்களா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, விவகாரம் தீவிரமடைந்ததை உணர்ந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், அந்தப் பெண்களை உடனடியாக விழா அரங்கில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in