ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்.. “பொருளை இப்போ வாங்குங்க… பணத்தை அப்புறம் கட்டுங்க”.. ப்ளிப்கார்ட்டில் வந்த அதிரடி புதிய அம்சம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்.. “பொருளை இப்போ வாங்குங்க… பணத்தை அப்புறம் கட்டுங்க”.. ப்ளிப்கார்ட்டில் வந்த அதிரடி புதிய அம்சம்..!!

Published

on

இந்தியாவின் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் துறையில் உலகளவில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்துள்ளது. இந்நிலையில் பயனர்களுக்குப் பொருட்கள் வாங்குவதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் பொருட்டு ‘ஃபிளிப்கார்ட் பே லேட்டர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பேயு ஃபைனான்ஸ் அமைப்போடு இணைந்து வழங்கப்பட்டு வரும் இக்கடன் சேவையை, வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகிய செயலிகள் வாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்தும் போதே, தங்களுக்கு வசதியான திருப்பிச் செலுத்தும் முறையைத் நேரடியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மூன்று விதமான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதல் விருப்பமான ‘பே லேட்டர்’ மூலம் அன்றாடப் பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்த 30 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கிறது. இரண்டாவது ‘பே இன் 3’ விருப்பம், கட்டணத்தைச் சீரான மூன்று தவணைகளாகப் பிரிக்க உதவுகிறது. மூன்றாவது ‘இ.எம்.ஐ’ திட்டமானது, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு 3 முதல் 12 மாத தவணைகளை வழங்குவதோடு, குறைந்த மதிப்புள்ள பொருட்கள் வாங்கவும் பயன்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள யு.பி.ஐ, டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் கேஷ் ஆன் டெலிவரி வசதிகளுடன் இப்புதிய சேவையும் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்குப் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in