LATEST NEWS
விளக்கை அணைத்த திமுக..? மின்துறையின் ரூ.2.47 லட்சம் கோடி கடன் ரகசியத்தை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்.. சட்டைப்பையில் பரபரப்பு..!!
திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் மொத்த நிலுவைக் கடன் ரூ .2,47,130 கோடியாக அதிகரித்துள்ளதால் அத்துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் ரூ.87,399 கோடி புதிய கடன்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், துறையின் கடனளவு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது நிர்வாகக் குறைபாட்டைக் காட்டுவதாக அவர் விமர்சித்தார்.
மின்சாரத்துறையை திமுக அரசு இக்கட்டான நிதிநிலைமையில் விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், முறையான நிதி மேலாண்மை இல்லாததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மார்ச் 31, 2026 நிலவரப்படி உள்ள இந்த பிரம்மாண்ட கடன் சுமை, மின்வாரியத்தின் செயல்பாடுகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் கடன் அதிகரிப்பு ஆகிய இரட்டைத் தாக்குதல்களால் மின்சாரத்துறை மீள முடியாத பொதுக்கடன் சுழலில் சிக்கவைக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
