“2026 தேர்தல் ஒரு சூரசம்ஹாரம்..” சூரனின் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய சாதாரண பாலகன்… சட்டசபையில் எதிர்கட்சிகளை அலறவிட்ட அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2026 தேர்தல் ஒரு சூரசம்ஹாரம்..” சூரனின் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய சாதாரண பாலகன்… சட்டசபையில் எதிர்கட்சிகளை அலறவிட்ட அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு..!!

Published

on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ரமேஷ் ஆன்மீகக் கதையை ஒப்பிட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசியுள்ளார். முருகன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது சூரசம்ஹாரம் தான் என்று குறிப்பிட்ட அவர், “நான் மட்டும்தான் ஆட்சி செய்வேன், நான் தான் சிறந்த ஆட்சியாளர், மற்ற எல்லோரும் எனக்கு அடிமைகள்” என்ற மமதை மனநிலையில் இருந்த சூரனின் ஆட்சிக்கு ஒரு சாதாரண பாலகன் கையில் வேலேந்தி வந்து முடிவுரை எழுதினார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கதையின் மூலம் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் எழுந்த நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். இதில் ‘சூரன்’ என தான் குறிப்பிட்டது எந்தவொரு தனி நபரையும் அல்ல என்றும்; மாறாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழல், லஞ்சம், சாதி மற்றும் மத அரசியலைத் தான் தான் சூரன் என்று உருவகப்படுத்திப் பேசியதாக அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

கையில் வேலேந்தி வந்து அந்த சூரனின் ஆட்சிக்கு முடிவுரை எழுதியதாக அவர் குறிப்பிட்டதன் மூலம், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் மற்றும் சாதி, மத அரசியலுக்கு எதிராகத் தற்போதைய தவெக அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளை அவர் மறைமுகமாகப் பெருமையுடன் அவையில் பதிவு செய்துள்ளார். ஆன்மீகக் கதையை அரசியலோடு ஒப்பிட்டு அவர் பேசிய இந்த விவகாரம் அவையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in