LATEST NEWS
அய்யோ..! 5 வயது சிறுமி விழுங்கிய 50 கிராம் தங்கக்கட்டி… மருத்துவனையில் நடந்த அதிரடி ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் திரில் சம்பவம்..!!
சீனாவின் வடக்கு பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும்கொண்ட சிறிய தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உரிய வசதி இல்லாததால், பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே சோதனை செய்ததில், அந்தத் தங்கக் கட்டி சிறுமியின் இரைப்பைக் குழியில் சிக்கியிருப்பதும், அது உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகளில் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்தில் இருந்ததும் தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அச்சிறுமிக்கு, மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மற்றும் ஒரு சுருக்குக் கயிற்றின் உதவியுடன் இரைப்பைக் குழியிலிருந்த தங்கக் கட்டியை சில நிமிடங்களில் பத்திரமாக வெளியே எடுத்தனர். தற்போது சிறுமி முழுமையாகக் குணமடைந்து, அவரது உடல்நிலை சீராக உள்ளது. இச்செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து, ஐந்து வயதுக் குழந்தைக்கு எட்டும் தூரத்தில் தங்கக் கட்டியை வைத்த பெற்றோரின் அலட்சியத்தைக் கண்டித்தும், அவர்களின் செல்வச் செழிப்பைக் குறித்தும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
