“இந்தியாவைப் போல இளைஞர்கள் ரோட்ல இறங்குவாங்க..!” உள்துறை அமைச்சர் கொடுத்த அதிரடி வார்னிங்.. அலறும் பாகிஸ்தான் அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தியாவைப் போல இளைஞர்கள் ரோட்ல இறங்குவாங்க..!” உள்துறை அமைச்சர் கொடுத்த அதிரடி வார்னிங்.. அலறும் பாகிஸ்தான் அரசு..!!

Published

on

பாகிஸ்தானில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழ்நிலை உருவாகலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் அரசால் எளிதில் எதிர்கொள்ளவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர்களை எந்தவொரு இழிவான பெயரிட்டு அழைத்தாலும் அல்லது அவர்களை அலட்சியப்படுத்தினாலும், அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் இறங்கினால் நாட்டின் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர்களின் ஆற்றலையும் எதிர்ப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் அது நாட்டிற்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in