LATEST NEWS
“மீன் பிரியர்களே உஷார்..!” கெளுத்தி மீன்களில் பரவும் விசித்திரப் புற்றுநோய்… மனிதர்களுக்கு ஆபத்தா இல்லையா..?! விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!!
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் எல்லைப் பகுதியில் பரந்து விரிந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் ஏரியில் வசிக்கக்கூடிய காட்டு வகைக் கெளுத்தி மீன்களில், ஒரு மீனின் உடலில் இருந்து மற்றொரு மீனுக்கு ஊடுருவிக் பரவக்கூடிய விசித்திரமான புற்றுநோய் நோய் தாக்கியுள்ளது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ‘நேச்சர்’ அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, நன்னீரில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையே தொற்றுநோய் போல புற்றுநோய் நேராகப் பரவுவது கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்ற வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் ரசாயன மாசுபாடு அல்லது வைரஸ் தொற்று எனக் கருதப்பட்ட நிலையில், மரபணு ஆய்வுகள் இது வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படவில்லை.
இதனையடுத்து உயிருடன் இருக்கும் புற்றுநோய் செல்களே ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் “குளோனல் கேன்சர்” வகையைச் சேர்ந்தது என்றும் நிரூபித்துள்ளன. மேலும் இதுவரை நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில கடல் சிப்பி இனங்களில் மட்டுமே கண்டறியப்பட்ட இத்தகைய நேரடியாகப் பரவும் புற்றுநோய், தற்போது கெளுத்தி மீன்களில் நான்காவது வகையாகப் பதிவாகியுள்ளது. இந்தப் புற்றுநோய் மீன்களின் வாய் பகுதி, மீசைகள் மற்றும் தோலில் கட்டிகளாக உருவாகி அவற்றின் உணவு தேடும் திறனைப் பாதித்தாலும், ஏரியில் போதுமான உணவு கிடைப்பதால் அவை தொடர்ந்து உயிர்வாழ்கின்றன. தற்போது நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியுள்ள இந்த நோய் மீன்களுக்கு இடையே மட்டுமே நிகழும் உயிரியல் நிகழ்வாகும்; உயிரினத் தடை மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, இந்த மீன்களைப் பிடிப்பதாலோ அல்லது சமைத்து உண்பதாலோ மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
