அம்மாடியோவ்..! நடுவிலே உடைந்த பாலம்… ஆனாலும் சீறிப்பாயும் கார்கள்… நெஞ்சை பதறவைக்கும் ஆபத்தான பயணம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோவ்..! நடுவிலே உடைந்த பாலம்… ஆனாலும் சீறிப்பாயும் கார்கள்… நெஞ்சை பதறவைக்கும் ஆபத்தான பயணம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!

Published

on

ஐரோப்பிய நாடான கிரீஸின் தெசாலி பகுதியில், நடுப்பகுதி உடைந்து ஆற்று நீரைத் தொடும் அளவிற்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பாலத்தில் வாகனங்கள் சீறிப்பாயும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் வீசிய பயங்கரமான ‘டேனியல் புயல்’ மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதியில் 79 பாலங்கள் சேதமடைந்தன. அதில் டெம்பி மற்றும் ஏஜியா நகராட்சிகளை இணைக்கும் ‘பலாயோபாயர்கோஸ்’ பாலமும் ஒன்றாகும், இது நடுவில் உடைந்து பைனியோஸ் ஆற்றின் நீர்மட்டத்திற்கு மிக அருகில் தரைமட்டமாகத் தணிந்துள்ளது.

இந்தப்பாலம் அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்துக்காக மூடப்பட்டு, எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அங்கு முறையான தடுப்புகளை அமைக்கவில்லை. இதனால், மாற்றுப் பாதையில் சென்றால் நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருக்கும் என்பதால், எரிபொருளையும் நேரத்தையும் மிச்சப்படுத்த உள்ளூர் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த உடைந்த பாலத்திலேயே தொடர்ந்து வாகனங்களை ஓட்டி வருகின்றனர். சமீபத்தில் ‘லாரிசாநெட்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்ரோன் வீடியோவில், ஒரு பெரிய போர்டு ரேஞ்சர் கார் இந்த அபாயகரமான சரிவில் மெதுவாக ஏறிப் பாலத்தைக் கடக்கும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.

Advertisement

இதில் மற்றொரு பெரிய ஆபத்து என்னவென்றால், கூகுள் மேப்ஸ் போன்ற வழிகாட்டும் செயலிகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் இந்த உடைந்த பாலத்தின் வழியே செல்லப் பரிந்துரைக்கின்றன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் நிலையைக் கண்டு, நீண்ட தூரம் பின்வாங்கிச் செல்வதா அல்லது உள்ளூர் மக்களைப் போல உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாலத்தைக் கடப்பதா என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்போதைய நிலையில் எந்த நேரத்திலும் பெரிய விபத்து ஏற்படலாம் என்பதால், இந்தப் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in