CRIME
பெண்ணின் அந்தரங்க உறுப்பில்.. அந்த மிஷினை வைப்பதும் பாலியல் வன்கொடுமையை… கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி வரலாற்றுத் தீர்ப்பு…!!
கேரள உயர்நீதிமன்றம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கொன்றில் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு பெண்ணின் அல்லது மைனர் சிறுமியின் ரகசிய உறுப்பின் மீது அதிர்வுறும் இயந்திரத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கருவியையோ வைப்பது வெறும் பாலியல் தொல்லை அல்ல; அது போக்சோ சட்டத்தின் கீழ் ‘ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமை’ மற்றும் ஐபிசி பிரிவு 375(b)-ன் கீழ் நேரடியாக ‘கற்பழிப்பு’ என்ற குற்றப் பிரிவின் கீழ் வரும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
திரிசூர் பகுதியைச் சேர்ந்த ஜோஷி என்ற குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, 12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வேலை தேடிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியிடம் அழகுக்கலை கற்றுத் தருவதாகக் கூறி, பிரபல போலி பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர் மன்சூன் மாவுங்கல் என்பவரது வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மன்சூனின் உதவியாளரான ஜோஷி, அச்சிறுமியைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து, அவரது ரகசிய உறுப்பில் அதிர்வுறும் இயந்திரத்தை ஆன் செய்து வலுக்கட்டாயமாக வைத்து கொடூரமான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கொடூரக் குற்றத்திற்காகக் கீழ் நீதிமன்றம் குற்றவாளி ஜோஷிக்கு விதித்த 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. ஒரு கருவியை ரகசிய உறுப்பின் மீது அல்லது அதன் அருகில் வைப்பதே சட்டப்படி ஊடுருவலுக்குச் சமம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் எந்தவித சட்டக் குறைப்பும் செய்ய முடியாது என்றும், குற்றவாளிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான தீர்ப்புகள் சமுதாயத்தில் பாலியல் குற்றங்களைக் குறைக்க உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
