LATEST NEWS
சபாநாயகர் அருகில் இருக்கும் அந்த நபர் யார்..? பத்திரப்பதிவு துறை ஊழல் தாதாவின் வலது கை அம்பலம்… விஜய்க்கு விரிக்கப்பட்ட வலை..? அதிர வைக்கும் பின்னணி..!!
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததில் டாஸ்மாக் துறைக்கு அடுத்ததாக நடந்த மெகா ஊழல் என்றால் பத்திரப்பதிவு துறைதான், அப்படி இருக்கையில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய திமுக அமைச்சர்களான கே என் நேரு, செந்தில்பாலாஜி என பலருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தினாலும் கூட, மிக பெரிய அளவில் ஊழல் நடந்த பத்திரப்பதிவு துறையை கையில் வைத்து இருந்த அப்போதைய அமைச்சர் மூர்த்தி தொடர்பான இடங்களில் மட்டும் அமலாக்க துறை சோதனை நடத்த வில்லை.
அதே போன்டர் தற்பொழுது தவெக ஆட்சிக்கு வந்த பின்பு, மாஜி திமுக அமைச்சர்களான செந்தில்பாலாஜி, ஏ வ வேலு, கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்ட நிலையில், கடந்த திமுக ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடியதாக கூறப்படும் பத்திரப்பதிவு துறையை கையில் வைத்திருந்த மூர்த்திக்கு சொந்தமான இடங்களில் இதுவரை தவெக அரசு லஞ்ச ஒழிப்பு துறை மூலம் சோதனையை தொடர வில்லை.
இந்நிலையில் தற்பொழுது தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் இருந்து தப்பிக்கவும், தன்னை பாதுகாத்து கொள்ளவும் தலைமை செயலகத்திலே உயர் பொறுப்பில் மூர்த்தியின் ஆள் இருக்கும் தகவல் தற்பொழுது வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, சபாநாயகர் அருகில் ஒருவர் நின்று கொண்டு, அடிக்கடி சபாநாயகர் காதில் ஒன்றை சொல்லுவார், சபாநாயகரிடம் துண்டு பேப்பர் ஒன்றை கொடுப்பார், இவர் யார் .? இவருக்கு அங்கே என்ன பொறுப்பு என்று பலரும் சட்டசபை கூட்ட தொடரை பார்த்த பலரும் கேள்வி எழுப்பி வருவதை பார்க்க முடிகிறது, தற்பொழுது அந்த நபர், யார் என்கிற தகவல் மட்டுமில்லை, அவருக்கும் முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உதவியாளராக இருந்தவர் தான் இவர் என்றும், இவருடைய பெயர் உடையார் சாமி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறையில், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பத்திர பதிவு நடந்தால் , அந்த பத்திரப்பதிவுக்கான டோக்கன் வாட்ஸ் ஆப் மூலம் அப்போது மூர்த்தியின் உதவியாளராக இருந்த உடையார் சாமிக்கு தான் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
உடையார் சாமி, அப்போதைய பத்திரப்பதிவு துறை அமைச்சரான மூர்த்தியிடம் காண்பித்து, அதன் பின்பு மூர்த்தி அப்ரூவ் செய்தால் தான் அந்த பத்திரப்பதிவு நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் சப் ரெஜிஸ்டர் போஸ்டிங் போட 50 லட்சம், 1 கோடி என கொடுக்கப்படும் பணம் உடையார் சாமி மூலமாகவே மூர்த்தியிடம் சென்று இருக்கிறது என்கிற தகவலையும் தமிழகத்தை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறைக்கு அடுத்த துறையான பத்திரப்பதிவு துறை தான் ஊழல் பெருக்கெடுத்து ஓடிய துறை என்கிற குற்றசாட்டு உள்ளது, அப்படியிருக்கையில், திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையை கையில் வைத்திருந்த மூர்த்தியின் உதவியாளராக இருந்த உடையார் சாமி, சட்டசபையில் செக்ஷன் ஆபீசராக இருந்து இன்று துணை செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார்.
ஏன் உடையார் சாமிக்கு பதில் அந்த பொறுப்புக்கு வேறு ஒரு அதிகாரியே இல்லையா என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல், உடையார் சாமி மூலமாக தன்னை மூர்த்தி காப்பாற்றி கொண்டு வருகிறார் என்கிற பார்வையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்காத வகையில் கடந்த திமுக ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடிய பத்திரப்பதிவு துறையி கையில் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து எப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் முதல்வரிடம் வைக்கும் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
