LATEST NEWS
ஊழல் செய்தால் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு “மரண தண்டனை”… சிங்கப்பூர் பாணி சட்டத்தை கொண்டுவாங்க… முதலமைச்சர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு அதிரடி ஆலோசனை..!!
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, பிரபல சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மிக முக்கியமான அதிரடி ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர்மட்ட ஊழலை முற்றிலும் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் கடுமையான சட்டங்களை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, அரசு நிர்வாகத்தின் மிக உயரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். அமைச்சர் மட்டத்திலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகள் மட்டத்திலும் எதிர்காலத்தில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் நடக்கும் ஊழல்களையும், இளைய தலைமுறையை அழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தையும் தடுக்க இதுபோன்ற மிகக் கடுமையான தண்டனைகள் மட்டுமே தீர்வாக அமையும் என்று ஸ்ரீதர் வேம்பு நம்புகிறார். தொழில்நுட்பத் துறையின் முன்னணி ஆளுமையான ஸ்ரீதர் வேம்பு, முதலமைச்சர் விஜய்க்கு விடுத்துள்ள இந்த துணிச்சலான சட்டப் பரிந்துரை தற்போது சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
